(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டு கழகம் சம்பியனாக மகுடம் சூடியுள்ளது.
வடக்கு கிழக்கில் 30 அணிகளை உள்ளடக்கியதாக கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகிய விலகல் முறையிலான குறித்த உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி நிகழ்வு நேற்று ராஜா விளையாட்டுக்கழக தலைவர் த.தயாபரன் தலைமையில் இடம்பெற்றது.
பிற்பகல் இடம்பெற்ற அரையிறுதிச் சுற்றின் முதலாவது போட்டியில் சொறிக்கல்முனை சாந்தன் குருஸ் அணியினரும் காஞ்சிரங்குடா ஜெகன் அணியினர் மோதியிருந்தனர். குறித்த போட்டியில் தண்ட உதை மூலம் காஞ்சிரங்குடா ஜெகன் அணி வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
தொடர்ந்து இடம்பெற்ற அரையிறுதிச் சுற்றின் இரண்டாவது போட்டியில் முல்லைத்தீவு உதய சூரியன் அணியினரும் பண்டாரியாவெளி நாகர் அணியினரும் பலப்பரிச்சை நடத்தியிருதனர். இதில் தண்ட உதை மூலம் முல்லைத்தீவு உதய சூரியன் அணி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
தொடர்ந்து மூன்றாம் நான்காம் இடம்களை தீர்மாணிக்கும் போட்டி தண்ட உதை மூலமான போட்டியாக இடம்பெற்றது. குறித்த போட்டியில் பண்டாரியாவெளி நாகர் அணியினர் மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொள்ள சொறிக்கல்முனை சாந்தன் குருஸ் அணியினர் நான்காம் இடத்தினை பெற்றுக்கொண்டனர்.
அடுத்து விளாவூர் யுத்தம் என வர்ணிக்கப்படும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி போட்டியில் முல்லைத்தீவு உதயசூரியன் அணியும் காஞ்சிரங்குடா ஜெகன் அணியும் மோதியிருந்தது, இதில் தண்ட உதை மூலம் காஞ்சிரங்குடா ஜெகன் அணி முதலாம் இடத்தினை பெற்றுக்கொள்ள இடண்டாம் இடத்தினை முல்லைத்தீவு உதயசூரியன் அணி பெற்றுக்கொண்டது.
உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் சிறந்த வீரனாக முல்லைத்தீவு உதயசூரியன் அணி வீரர் எஸ்.ஆர்த்தியும், சிறந்த பின்கள வீரனாக முல்லைத்தீவு உதயசூரியன் அணி வீரர் எஸ்.அபியும் தெரிவு செய்யப்பட்ட அதே வேளை சிறந்த பந்துக் காப்பாளராக ஜெகன் அணியின் பந்து காப்பாளரும் தெரிவு செய்யட்டனர்.இறுதியில் வெற்றிபெற்ற கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக கிராமிய,பாடசாலை விளையாளையாட்டு,உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரவீந்திர சமரவிக்ரம மற்றும் பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கான பரிசுகளை வழங்கிவைத்தார்.
Post A Comment:
0 comments so far,add yours