(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு ஜனாஸாக்களை ஏற்றுவதற்கான வாகனம் ஒன்று (22) வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது.
இந்த வைபவம் காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் அலுவலகத்தில் அதன் தலைவர் யு.எல்.எம்.றபீக் தலைமையில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், குருக்கள்மடம் இராணுவ முகாம் அதிகாரி கெப்டன் என்.சி.அத்துக்கொரல, காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஆலோசகர்களான எம்.எம்.ஜரூப், அஷ்ஷெய்க் எம்.சி.எம்.றிஸ்வான் மதனீ, காத்தான்குடி இமாஸா வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் எம்.அஜ்வத் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் பொலிஸ் அதிகாரி உட்பட ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த அமைப்பின் செயற்திட்டம் தொடர்பாக இதன் ஆலோசகர்களில் ஒருவரான அஷ்ஷெய்க் எம்.சி.எம்.றிஸ்வான் மதனீ உரையாற்றினார்.
இதன் போது காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் சேவையை பாராட்டி நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஜனாஸாக்களை ஏற்றுவதற்கான வாகனமும் கையளிக்கப்பட்டது.
இந்த வாகனம் காத்தான்குடி இமாஸா வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் எம்.அஜ்வத் அவர்களினால் ஜனாஸா நலன்புரி அமைப்பின் நிருவாகிகளிடம் கையளிக்கப்பட்டது.
இந்த வாகனத்தை வாங்குவதற்கான நிதியுதவினை காத்தான்குடி இமாஸா வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் எம்.அஜ்வத் அவர்களின் கூடுதலான நிதி பங்களிப்பும் மற்றும் சில தனவந்தர்களும் உதவி செய்துள்ளனர்.
இந்த வாகத்தின் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட வைத்தியசாலைகளில் மரணிக்கும் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள ஜனாசாக்களை ஏற்றி கொடுத்து வருகின்றனர்.
அதே போன்று ஜனாஸா நலன்புரி அமைப்பு ஜனாசாக்களை அடக்குவதற்கும் உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours