எம்.எஸ்.எம்.ஸாகிர்

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, முப்பத்தொரு ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், கட்டுரைப் போட்டி ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது. இக்கட்டுரைப் போட்டியில் வயது வேறுபாடின்றி அனைவரும் பங்குபற்றலாம்.
 
'வட மாகாண முஸ்லிம்களின் இன்றைய அவல நிலையும், அதில் இருந்து தீர்வை நோக்கி' எனும் தலைப்பில் இக்கட்டுரைப்போட்டி இடம்பெறவுள்ளது. ஆக்கங்கள் இம்மாதம் (ஒக்டோபர்) 30ஆம் திகதிக்கு முன் கிடைக்கக் கூடியவாறும், சுமார் 1000 சொற்களுக்கு மேற்படாமலும், தட்டச்சு செய்து அனுப்பி வைக்க வேண்டும். வெற்றி பெறும் ஆக்கங்களுக்கு பணப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டியில் முதலாம் இடத்தைப் பெறும் வெற்றியாளருக்கு 15,000 ரூபாவும், இரண்டாம் இடத்தைப் பெறும் வெற்றியாளருக்கு 10,000 ரூபாவும், மூன்றாம் இடத்தைப் பெறும் வெற்றியாளருக்கு 5,000 ரூபாவும் வழங்கப்படும்.

போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். தமிழ்மொழி மூலம் மாத்திரம் இப்போட்டி நடைபெறும். உங்கள் கட்டுரைகளை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்கலாம்.

மின்னஞ்சல் - acumlyfadmn@gmail.com, அல்லது அனுப்ப வேண்டிய முகவரி - அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், இல: KG 7, எல்விடிகல மாடி வீடு, கொழும்பு 8.


All Ceylon Union of Muslim League Youth Front, No: KG 7, Elvitigala Flat, Colombo 8.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours