(க.விஜயரெத்தினம்)


சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு விழிப்புலனற்றோர்களது உரிமைகளை எடுத்துரைக்கும் வகையில் இன்று திங்கட்கிழமை (25) மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் நிலையத்தில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் கலந்துகொண்டார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் இவ் விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவில்லை. இதேவேளை இன்று இந் நிகழ்வு எளிமையான முறையில் விழிப்புணர்வு தரிசனம் பாடசாலைக்கருகில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அதன் பின்பு பாடசாலை கொடி ஏற்றப்பட்டு இங்கு கல்வி கற்கும் மாணவர்களின் திறமையை காட்டும் கலை நிகழ்வுகளும் இங்கு முன்னெடுக்கப்பட்டது.இவ் நிகழ்விற்கு கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலய கல்வி  அலுவலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கரிகரராஜ் ,மட்டு லயன்ஸ் கழக வலய முதல்வர் கே.லோகேந்திரன்,கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் முன்னாள் அதிபரும்,சமூக ஆர்வலருமான திருமதி.திலகவதி ஹரிதாஸ் உட்பட தரிசனம் விழிப்புணர்வு நிலையத்தின் உத்தியோகஸ்தர்கள்,மாணவர்கள், பொதுமக்கள்  கலந்துகொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours