(வி.ரி.சகாதேவராஜா - )

ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்புக்கிளை தனது நிவாரணப் பணிகளை கண்டிக்கும் விஸ்தரித்துள்ளது.

ஏலவே, கடந்தவாரம் மன்னார் மாவட்டத்திற்கும் இம்மனிதாபிமான நிவாரணப்பணி விஸ்தரிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

கண்டி மாவட்டத்தில் உள்ள கலேகல மற்றும் லவந் எஸ்டேட் என்னும் பகுதிகளில் நேற்றுமுன்தினம் ஒருதொகுதி உலருணவு நிவாரணம் வழங்கப்பட்டது.

ராமகிருஸ்ணமிசனின் மட்டுமாநில மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷ்யானந்த ஜீ மஹராஜ் உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் இவ்வுலருணவு நிவாரணம் வழங்கப்பட்டது.

அப்பிரதேசங்களிலுள்ள பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களைச் சார்ந்த 675 பயனாளிகளுக்கு சுமார் 2லட்சத்து 15ஆயிரம் ருபா செலவில் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன
ஏலவே மிசனின் பணிகள் மன்னார் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours