( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இம்முறை க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பைசர் ரக தடுப்பூசி நேற்று(25) திங்கட்கிழமை வெற்றிகரமாக ஏற்றப்பட்டதாக காரைதீவுப் பிரதேச  சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.

காரைதீவுக்கோட்டத்திலுள்ள காரைதீவு விபுலாநந்த தேசிய கல்லூரி மற்றும்இ.கி.மி.பெண்கள் பாடசாலையில் இன்று காலைவேளையிலும் காரைதீவு சண்முகா மகாவித்தியாலயம் மாவடிப்பள்ளி அல்அஷ்ரப் மகாவித்தியாலயத்தில் பிற்பகல்வேளையிலும் 16வயது மற்றும் 17வயதுக்குட்பட்ட மாணவர்களுக்காக இத்தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.

காரைதீவுப்பிரதேசத்தில்  பிரதேச  சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தலைமையில் இடம்பெறவிருக்கும் இவ்வேலைத்திட்டத்தில் சுமார் 220 மாணவர்கள் இத்தடுப்பூசிகளைப்பெற்றனர்.
இதேவேளை உயர்தர மாணவர்களுக்கான பைசர் ரக தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் கடந் 3தினங்களாக நடைபெற்றுவந்தது.இதுவரை 300மாணவர்கள் இதனைப்பெற்றுள்ளார்கள் என வைத்தியஅதிகாரி தஸ்லிமா பஷீர் மேலும் தெரிவித்தார்.

18-19வயதுக்குட்பட்ட உயர்தர மாணவர்களுக்கான இத்தடுப்பூசிகள் காரைதீவு விபுலாநந்த தேசிய கல்லூரி காரைதீவு சண்முகா மகாவித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் காலை 8மணிமுதல் மாலை 4மணி வரை ஏற்றப்பட்டது.

இந்த இருதினங்களிலும் ஏற்றத் தவறிய மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை(23) காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி பணிமனையில் ஏற்றப்பட்டது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours