பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலியின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 9 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ஷரீஆ சட்டம் குறித்து சர்ச்சையான கருத்தொன்றை அவர் வெளியிட்டிருந்தார்.

அந்தக் கருத்து இன முரணப்பாட்டை ஏற்படுத்துகின்றது எனத் தெரிவித்து மார்ச் 16 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கான விளக்கமறியல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கன உத்தரவை நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours