(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக டெங்கு உருவாகக்கூடியதான நிலமையை கருத்திற்கொண்டு பாடசாலைகளில் சுகாதரப்பிரிவினர்களினால் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.குறிப்பா
மட்டக்களப்பு ,மட்டக்களப்பு மத்தி,மட்டக்களப்பு மேற்கு, கல்குடா மற்றும் பட்டிருப்பு கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளே இவ்வாறு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமையை அவதானிக்க கூடியதாகவுள்ளது.கொவிட் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதுபோன்று டெங்கு தொற்றிலிருந்து மாணவர்களையும்,பாடசாலை நிருவாகத்தையும் பாதுகாப்பதே சுகாதாரத்துறையினரின் செயற்பாடாக இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்கள பணீமனையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக டெங்கு குடம்பிகளின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் இருப்பிடங்களையும்,திணைக்களங்
இதேவேளை மழைநீர் தேங்கி நிற்கும் இடங்கள்,வடிகான்களில் துப்பரவு வேலைகளை உள்ளுராட்சி மன்றத்தினரும்,வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களும் முன்னெடுத்து வருவதுடன் டெங்கு உருவாக்ககூடிய இடங்களை வைத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours