(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு  

பிரதேச செயலக ரீதியாக விவசாயிகளின் நன்மைகருதி அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் உரச் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும்  கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விசேட கலந்தரையாடலின்போது பிரதேச செயலக ரீதியாக சேதனைப்பசளை உரம் தயாரிக்கும் செயற்பாடானது விரிவுபடுத்தப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ரீதியாக அங்குள்ள சமூக மட்ட அமைப்புக்களைக் கொண்டு சேதனைப்பசளையினை தயாரிப்பதற்கான செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேவேளை சேதனைப்பசளை உரத்தினை உற்பத்தி செய்யும் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு மானியமாக கிழக்கு மாகாண ஆளுனர் ஊடாக 9 மில்லியன் நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த நிதியினை பிரதேச செயலக ரீதியாக கிடைக்கப்பெற்றுள்ள சேதனைப்பசளை தயாரிக்கும் முயற்சியாளர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களில்  முன்னுரிமை அடிப்படையில் முதல்கட்டமாக 8 பிரதேச செயலக பிரிவுகளிற்கு இந்நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours