( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு ஒழிப்புவேலைத்திட்டம் சமகாலத்தில் சுகாதாரத்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.


பருவநிலை மாற்றம் காரணமாக மழைக்காலம் ஆரம்பமாக உள்ளதனால் ,காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீர் தலைமையில் இவ்வேலைத்திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

உயர்தரமாணவர்க்கு பைசர் வக்சீன் ஏற்றப்படும் வேலைப்பழுக்களின் மத்தியில் டெங்குநோய் ஒழிப்புவேலைத்திட்டமும் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் சா.வேல்முருகு  பொது சுகாதார பரிசோதகர்கள் நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.

காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் இணைந்து மேற்கொள்ளும் டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்கும் பொருட்டு தொடர்ச்சியாக கொள்கலன் சேகரிப்பு நிகழ்வுகள் மாளிகைகாடு, காரைதீவு ,மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றுவருகின்றன.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீர் இதுதொடர்பாக கருத்துரைக்கையில்:

 நுளம்பு பெருகுவதனை குறைக்கவும் எங்கள் பகுதியில் டெங்கு பரவுவதைத் தடுக்கவும் ,தினமும் காலை குறைந்தது 10 நிமிடங்கள் உங்கள் சுற்றுச்சூழலைப் நுளம்பு பெருகும் இடங்களை அகற்றி டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். பொதுமக்களாகிய அனைவரும் எமது பிரதேசத்திலிருந்து டெங்கை ஒழிக்க உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours