( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக கிழக்கின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலினூடாக வழங்கிவைத்தார்.
கனடா நாட்டிலுள்ள ' ten டீப் ' நிறுவனம் இதற்கான நிதிஅனுசரணையை கிழக்கின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலினூடாக வழங்கியுள்ளது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்துகொண்டுரையாற்றியதுடன் நிவாரணப்பொதிகளை வழங்கிவைத்தமை விசேட அம்சமாகும்.
கொரோனாத் தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்த ஒருதொகுதி(500குடும்பங்கள்) அம்பாறை மாவட்ட மக்களுக்கு 1மில்லியன் ருபா(10லட்சருபா) செலவில் உலருணவு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் ஓரங்கமாகவே இது நடைமுறைப்படுத்தபட்டது.
வேலைத்திட்ட ஒருங்கிணைப்பாளரும் பிரபல சமுகசெயற்பாட்டாளருமான வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இந் நிவாரணவிநியோகம் இடம்பெற்றது.
நிகழ்வில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.சிறிரங்கன் ஆசிரியர்களான இராஜேந்திரன் . வாமதேவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கனடா நாட்டிலுள்ள ' ரு டீப் ' நிறுவனம் இதற்கான நிதிஅனுசரணையை கிழக்கின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலினூடாக வழங்கியுள்ளது.
முன்னதாக திருக்கோவில் பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய மண்டானை தங்கவேலாயுதபுரம் கஞ்சிகுடிச்சாறு; திராய்க்கேணி மற்றும் அட்டப்பள்ளம் ஆகிய கிராம மக்களுக்கு இத்திட்டத்தின்கீழ் ஏலவே உலருணவு நிவாரணம் வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours