நூருல் ஹுதா உமர்

1992 ஆம் ஆண்டு உலக உளநல மையத்தினால் ஒக்டோபர் 10 ஆம் திகதி உலக உளநல தினமாக பிரகடனம் செய்யப்பட்டு ஒவ்வொரு வருடமும் சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. "சமமற்ற உலகில் அனைவருக்கும் உள ஆரோக்கியம் " எனும் கருப்பொருளின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான உலக உளநல தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக இறக்காமம் பிரதேச செயலக உளவளத்துணை பிரிவினால் உலக உளநல தின நிகழ்வுகள் திங்கட்கிழமை (11) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான், உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல் அஹமட் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

பிரதேச செயலக  சமூக சேவைப் பிரிவு உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எல்.எம். பைஸல் (மதனி), பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், சிறுவர்  பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப், ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான "வேலைத்தளத்தில் உளநல ஆரோக்கியம்" எனும் தலைப்பில் உளவள ஆலோசனைகள் வழங்கிவைக்கப்பட்டன.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours