.

 (வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்றுப்பிரசித்திபெற்ற நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத் தலைவர் கோ.கமலநாதன்(68) நேற்று(21)வியாழன் காரைதீவில் காலமானார்.

காரைதீவைப்பிறப்பிடமாகக்கொண்ட கோ.கமலநாதன் முன்னாள் இலங்கை தொலைத்தொடர்புத் திணைக்கள உத்தியோகத்தராவார். 3பெண்பிள்ளைகளின் தந்தையான இவர் காரைதீவில் சமுகசேவைகளில் முன்னின்று பணியாற்றியவர்.

1953.03.15 ஆம் திகதி பிறந்த கோ.கமலநாதன்கடந்த ஒருதசாப்தகாலமாக மடத்தடி மீனாட்சிஅம்மன்ஆலயத்தின் தலைவராக இருந்து அரும்பணியாற்றிவராவார்.

ஆலயவளர்ச்சியில் அரும்பாடுபட்டு உழைத்த தலைவர் கோ.கமலநாதன் புதிய ஆலயமொன்றை அமைத்து கும்பாபிசேகம் காணவிருந்தவேளையில் காலமாகியுள்ளமை வேதனையளிப்பதாக உபதலைவரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அனுதாபஅஞ்சலிக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அன்னாரர் பூதவுடல் இன்று(22)வெள்ளி காலை 10மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் தகனக்கிரியை இடம்பெறுமென குடும்பத்தினர் தெரிவித்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours