(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே.கருணாகரன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற குறித்த பயிற்சி செயலமர்வில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் விவகார பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரோஷன் வீரசூரிய கலந்துகொண்டு பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் தெளிவுபடுத்தியிருந்தார்.
இதன்போது பிரதேச செயலக ரீதியில் மின் இணைப்புகளை வழங்கும்போது ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு இருக்கின்ற சட்டபூர்வமான அதிகாரங்கள், அவ்வாறான அதிகாரங்கள் ஊடாக பிரச்சனைகளுக்கு எவ்வாறான தீர்வை பெற்றுக்கொடுக்க பிரதேச செயலாளர்களால் இயலும் என்பவை தொடர்பாகவும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எமது நாட்டில் உள்ள ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மின்னினைப்பினை பெறும்போது எதிர்நோக்கும் பிரச்சனைகளும் அவ்வாறான பிரச்சனைகளை தீர்த்துவைப்பதற்கு அப்பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுகின்றார்கள், எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றி கண்டுள்ளார்கள் என்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேபோல் மின் பாவணையாளர்களுக்கும் இலங்கை மின்சார சபைக்குமாண பிணைப்பை மேலும் வலு சேர்க்கும் வண்ணம் பிரதேச செயலாளர்கள் கூடிய கவனம் எடுத்து தனது கடமையைச் செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இப்பயிற்சி வகுப்பின் ஊடாக தெளிவூபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பயிற்சி வகுப்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மாவட்ட செயலக உயர் அதிகாரிகளும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களும்
Post A Comment:
0 comments so far,add yours