(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் நவராத்திரி விழா இந்துக் கல்லூரியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
நவராத்திரி விழாவானது ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதில்
வீரத்தின் வடிவமான துர்க்கைக்கும், செல்வத்தின் வடிவமான இலட்சுமிக்கும், கல்வியின் வடிவமான சரஸ்வதிக்கும் விழா எடுத்து விரதமிருந்து வழிபடுவது வழக்கமாகும்
ஒன்பது நாள் நிறைவுபெற்று பத்தாம் நாள் விஜயதசமியாகும், அன்றைய தினம் ஏடு தொடங்குதல் முதலான சுப காரியங்களை ஆரம்பிப்பது வழக்கம்.
ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய பிரதம குரு தலைமையில் இடம்பெற்ற பூசை நிகழ்வில் செல்வத்தான் வடிவமான இலக்சுமிக்கு பொங்கலிட்டு, பிரசாதம் வைத்து விஷேட பூசை இடம்பெற்றது
இன்றைய பூசையினை இந்துக் கல்லூரியின் தரம் 10, தரம் 11 மாணவர்களும் ஆசிரியாகளுமாக இணைத்து ஏற்பாடு செய்து நடாத்தினர்.
Post A Comment:
0 comments so far,add yours