ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கு அமைவாக “ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தினூடாக ஆயித்தியமலை மணிபுரம் தணிகாச்சலம் வீதியினை கொங்கிறீட் வீதியாக
புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும்
சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சிபார்சில் 2.2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள 875 மீற்றர் வீதிக்கான
முதற்கட்டப்பணிகளை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆரம்பித்துவைத்துள்ளார்.
மணிபுரம் மாரியம்மன் கோயிலில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டு வேலைத்திட்டத்தினை கொங்கிறீட் இட்டு ஆரம்பித்து வைத்துள்ளனர்.
மணிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் இ.குணநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டமிடல் பொறியியலாளர்
Post A Comment:
0 comments so far,add yours