(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட Z score வெட்டுப்புள்ளியின் பிரகாரம் இம்முறை நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து 48 மாணவர்கள் நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5 வருட காலத்தில்  இருந்து மாணவர்களின் பல்கலைக்கழக உட்பிரவேசம் அதிகரித்து வருகின்றமை இப்பாடசாலைக்கு  நாடளாவிய ரீதியில் நற்பெயரை ஈட்டித்தந்துள்ளது.

இதற்காக உழைத்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும், அண்மைக்காலமாக சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கி, பாடசாலையின் பாடவிதான, இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறப்பான முன்னேற்றத்துக்கு உழைத்துக்கொண்டிருக்கின்ற கல்லூரியின் அதிபர் ஏ.அப்துல் கபூர், மாணவர்களின் முன்னேற்றத்துக்கு பங்காற்றிய அனைத்து சமூக நிறுவனங்களுக்கும்  பாடசாலை சமூகம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours