( எம். என். எம். அப்ராஸ் )
இதன் போது பிரதம அதிதியாக கிழக்குமாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்பு செயலாளருமான கே.எம். அப்துல் ரசாக் (ஜவாத்) அவர்கள் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எச். எம். நிஜாம் மற்றும் கல்முனை ஸாகிறா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.எஸ். முகமட் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நூல்நயத்தல் - நூலின் ஆக்கம் எழுத்தாளரின் வகிபாகம், எழுத்தாளுகை, நூலாசிரியரின் எண்ணச் சிதறல்கள் தொடர்பில் ஆசிரியரும் பிரபல எழுத்தாளரும், பன்முக ஆளுமையுமான கவிதாயினி சுல்பிகா செரீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
பிரதம அதிதி கே.எம். அப்துல் ரசாக் (ஜவாத்) அவர்கள் இங்கு உரையாற்றும் போது வாசிப்பு ஒரு மனிதனை எவ்வாறு பூரணப் படுத்தும் என்றும் தற்கால இளைஞர்களின் எதிர்காலமே போதைப்பொருள் பாவனைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் மூலம் கேள்விக் குறியாக உள்ள காலத்தில் இவ்வாறான மாணவனின் எழுத்துப் பணியானது தனக்கு மிகுந்த சந்தோசத்தையும் புத்துணர்வையும் தந்துள்ளதாகவும் அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் சமூகத்தின் விடிவிற்காக இவரது வைத்திய பணி மற்றும் எழுத்துப் பணி தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பிரதம அதிதி உரையின் பிற்பாடு நூலாசிரியரினால் மேற்படி நூல் வெளியீட்டு வைக்கப்பட்டு பிரதம அதிதி அவர்களுக்கும் சிறப்பு பிரதிகள் நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு அதிதிகள் மற்றும் தனக்கு ஆரம்பம் முதல் கற்பித்த ஆசிரிய ஆசியைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது
இறுதியாக ஏற்புரையையும் நன்றியுரையையும் மேற்படி நூலின் ஆசிரியரும் கிழக்குப் பல்கலைக்கழக வைத்தியபீட மாணவனுமாகிய யுஷ்ரி மபாத் அவர்கள் நிகழ்த்தினார்.
இதன் போது தான் இந்த நூல் எழுதுவதற்கான பிராதன காரணம், நடுத்தர சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் கல்வியின் அவசியம், கல்வி கற்கும் போது உள்ள சவால்கள், நல்ல நண்பர்களின் தேர்வு ஒரு மாணவனை எவ்வாறு உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்,தான் கடந்து வந்த வாழ்வியல் பாதைகள் போன்றவற்றின் சுருக்கமே இந்த 'ட்ராஃபிக் ல்லைட்' என்று குறிப்பிட்டார்.
Post A Comment:
0 comments so far,add yours