( வி.ரி.சகாதேவராஜா)
கொட்டும்மழையில் நள்ளிரவில் சுகாதாரமுறைப்படி மாஸ்க் அணிந்துவந்த நபரால் நான்கு உண்டியல்கள் தகர்க்கப்பட்டு திருடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் காரைதீவு நந்தவனப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று(09)செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் ஆலயத்திலுள்ள சிசிவிரி கமராவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு 12.30 -1.30மணிவரையான காலப்பகுதியில் திருடனொருவன் தலைக்கவசத்துடன் சுகாதாரமுறைப்படி மாஸ்க் அணிந்து ஜாக்கட் அணிந்து மதில்மேலால் ஏறி ஆலயத்துள் குதித்து ஆறுதலாக ஒருமணிநேரம் இந்த திருட்டுச்சம்பவத்தை நடாத்தியுள்ளான்.
மழைபொழிந்துகொண்டிருப்பதும் திருடனைக்கண்டதும் நாய் குரைப்பதும் கமராவில் பதிவாகியுள்ளது.
காலையில் உண்டியல்கள் தகர்க்கப்பட்டு அங்கிருந்த பணம் திருடப்பட்டமை ஆலய நிருவாகத்திற்கு தெரியவந்தது. அவர்கள் காரைதீவு மற்றும் சம்மாந்துறைப் பொலிசில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
பொலிசார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டுள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours