ஜக்கிய மக்கள் இளைஞர் சக்தியின் அம்பாறை மாவட்ட இணைச் செயலாளராக, ஜக்கியமக்கள் சக்தி கட்சியின் அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசங்களுக்கான அமைப்பாளரான வெள்ளையன் வினோகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவரும், ஜக்கியமக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ நேற்றுமுன்தினம்(8)திங்களன்று கொழும்பில்வைத்து வழங்கிவைத்தார்.
அச்சமயம், ஜக்கிய மக்கள் இளைஞர் சக்தியின் இலங்கைக்கான தலைவர் மஹேன் திசாநாயக்கவும் உடனிருந்தார்.
ஜக்கியமக்கள் சக்தி கட்சியின் அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசங்களுக்கான அமைப்பாளரான வெள்ளையன் வினோகாந்த் கடந்தகாலங்களில் அர்ப்பணிப்புடன் ஆற்றிய பணிகளையும் சேவைகளையும் கருத்திற்கொண்டு இப்பாரிய நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அங்கு நாடளாவியரீதியில் இணைச்செயலாளர்கள் அமைப்பாளர்கள் நியமனம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours