( வி.ரி.சகாதேவராஜா)

மாத்தளை மாநகர மேயர் சந்தனம் பிரகாஷ் வரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு நேற்றுமுன்தினம் விஜயம் செய்தார்.

ஆலயபரிபாலனசபைத்தலைவர்  கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அவரையும் அவருடன் வருகைதந்த மாநகரசபை உறுப்பினர் ரி.எஸ்.மோகன் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் மாலைசூட்டி வரவேற்றார்.

ஆலயத்தை சுற்றிகாட்டிய தவிசாளர் புதிய ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் நடைபெறுவதனையொட்டி பணிகள் இடம்பெற்றுவருவதனையும் காட்டினார்.

ராஜநாகம் வதியும் பிரதான புற்றினை வழிபட்ட மாத்தளைமேயர் பிரகாஷ் அதன் புனரமைப்பிற்கு உதவுவதாகவும் குறிப்பிட்டார்.அதேவேளை மகாகும்பாபிசேகத்திற்கு வருகைதருமாறும் தலைவர் அழைப்புவிடுத்தார்.

பின்னர் மேயர் பிரகாஸ் குழுவினர் வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திற்கும் விஜயம்செய்து தரிசித்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours