(வி.ரி.சகாதேவராஜா )
உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளரின் நினைவு வளாகத் திறப்புவிழாவும், சுவாமிகள் தொடர்பான இரு ஆய்வுநூல்கள் வெளியீட்டுவிழாவும் ,(17) புதன்கிழமை கல்லடியிலுள்ள சுவாமியின் புனரமைக்கப்பட்ட சமாதி அமைந்துள்ள மணிமண்டப வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றன.
பின்பு வளாகத்திலுள்ள சுவாமி விபுலாநந்த மணிமண்டபத்தில் அரங்கநிகழ்வுகள் ஆரம்பமாயின.
வரவேற்புரையுடன்கூடிய அறிமுகவுரையை துணை மேலாளர் ஸ்ரீமத்சுவாமி நீலமாதவானந்தர் ஜீ நிகழ்த்தினார்.
சிறப்புரைகளை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் வே.ஜெகதீசன் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
இலங்கை இராமகிருஸ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மஹராஜ் இந்துசமய கலாசார திணைக்களம் பதிப்பித்த இரு நூல்களை வெளியிட்டுவைத்து ஆசியுரையை நிகழ்த்தினார்.விழாவில், கிழக்குபல்கலைக்கழக விபுலாநந்தா அழகியல்கற்கைகள் நிறுவன பணிப்பாளர் திருமதி பாரதி கென்னடி, காரைதீவு விபுலாநந்தா ஞாபகார்தத் பணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா, மட்டக்களப்பு விபுலாநந்த நூற்றாண்டுவிழாக்குழுத் தலைவர் க.பாஸ்கரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு சுவாமிகள் நூல்பிரதிகளை வழங்கினார்.
Post A Comment:
0 comments so far,add yours