(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலயத்தில் ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ.மஜீதின் ஓய்வு நிலையைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வும் மற்றும் வித்தியாலயத்திலிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்ற முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். பைசாலை கௌரவிக்கும் நிகழ்வும் மிகச் சிறப்பான முறையில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் யு.எல். நஸார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். சாகிர் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை கல்வி வலய கணக்காளர் ஹபிபுல்லா, விசேட அதிதியாக முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீதின் புதல்வர் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஸ்லம் சஜா மற்றும் வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பிரதி அதிபர் றிப்கா அன்ஸார், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் உட்பட மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours