நூருல் ஹுதா உமர்

கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீன் மற்றும் ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை குழுவினருக்கிடையிலான சந்திப்பு  (15)  கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதராலயத்தில் இடம்பெற்றது.

ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் பணிப்பளார் ஜெ.எம்.பாஸித் மற்றும் ஓவிக் கலைஞர் நஸார் சர்பான் ஆகியோர் கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீனை சந்தித்து கட்டார் நாட்டில் ஓவியக் கலையில் தனது திறமையை வெளிக்காட்டி வரும் இலங்கையைச் சேர்ந்த நஸார் சர்பான் வரைந்த  ஓவியங்களை காண்பித்ததோடு, தூதுவரும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இதன்போது தெரிவித்திருத்தார். இந்நிகழ்வில் தூதரக சிரேஷ்ட அதிகாரி ரஷீத் எம். பியாஸ் (நளீமி) உம் கொண்டிருந்தார். தற்போது கத்தாரா அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஓவியக் கண் காட்சியில் நஸார் சர்பான் வரைந்த ஓவியங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours