( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாணசபை நிதியொதுக்கீட்டில் உள்ளுராட்சிமன்ற நூலகங்களுக்கான நூல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் ,காரைதீவுப் பிரதேசசபைக்குட்பட்ட காரைதீவு ,மாளிகைக்காடு ,மற்றும் மாவடிப்பள்ளி நூலகங்களுக்கான நூல்த்தொகுதியும்  வழங்கிவைக்கப்பட்டன.

காரைதீவு பிரதேசசபைதவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இந்நிகழ்வு காரைதீவு விபுலாநந்தா கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

பிரதேசசபை உறுப்பினர்களான த.மோகனதாஸ், ச.சசிக்குமார், எ.ஆர்.எம்.றணீஸ் சபை செயலாளர் அ.சுந்நரகுமார் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் நுலகங்களுக்கான நூல்த்தொகுதிகள் வழங்கிவைக்கப்பட்டன.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours