எதிர்காலத்தில் கோவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளதால் கிழக்கு மாகாணத்தில் அனைவரும் தடுப்பூசி பெற்றுகொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் இன்று தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகள்,வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளது. இதுவரை முதலாம், இரண்டாம் தடுப்பூசி பெறாதவர்கள் தத்தமது சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தங்களுக்கான தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கோவிட்-19 பைசர் தடுப்பூசி 16 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட 93 வீதமானவர்களுக்கு ஏற்றப்பட்டுள்ளது. 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு 93 வீதமானவர்களுக்கு முதலாவது தடுப்பூசியும், 82 வீதமானவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours