களுவாஞ்சிகுடி பிரதேசே செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் வழிகாட்டலில் கலாசார அலுவல்கள் திணைக்களமும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து (வாசிப்போம் இன்புறுவோம் என்ற தொனிப்பொருளில் மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் செயற்பாடும் பரிசளிப்பு நிகழ்வும் களுவாஞ்சிக்குடி சக்தி இல்லத்தில் இடம்பெற்றது.

கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.கருணாகரன் அவர்களின் ஏற்பாட்டில் திருமதி ராதிகா கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிறுவர் நன்நடத்தை அலகுப் பொறுப்பதிகாரி ஜனாப் ரபாஸ்  சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் இ.கருணாகரன் சக்தி இல்ல பொறுப்பதிகாரி ஜீவமணி(ஆசிரியர்) ஆசிரியர் எருவில் கல்வி சமுக அபிவிருத்தி ஒன்றியத்தின் செயலாளருமான இ.ஜீவராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதன் போது வாசிப்பு ஒரு மனிதனை பூரணத்துவமாக்குகின்றது என்ற தலைப்பில் மாணவர்களுக்கான கருத்துரை இ.ஜீவராஜ் ஆசிரியர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours