(காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா)
உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளரின் நினைவு வளாகத் திறப்புவிழாவும், மட்டு.இ.கிமிசன் துணை மேலாளர் ஸ்ரீமத்சுவாமி நீலமாதவானந்தர் ஜீ எழுதிய சுவாமிகள் தொடர்பான இரு ஆய்வுநூல்கள் வெளியீட்டுவிழாவும் இன்று(17) புதன்கிழமை கல்லடியிலுள்ள சுவாமியின் புனரமைக்கப்பட்ட சமாதி அமைந்துள்ள மணிமண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளன.
வரவேற்புரையுடன்கூடிய அறிமுகவுரையை துணை மேலாளர் ஸ்ரீமத்சுவாமி நீலமாதவானந்தர் ஜீ நிகழ்த்த, நூல்கள் தொடர்பான அறிமுகவுரையை தென்கிழக்குபல்கலைக்கழக சிரேஸ்விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ரகுவரன் நிகழ்த்தவுள்ளார்.
சிறப்புரைகளை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் வே.ஜெகதீசன் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்துவார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours