கடந்த 2006 ஆம் ஆண்டு  திருமலையில்  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16வது ஞாபகார்த்த தின  நிகழ்வு நாளை திங்கட்கிழமை 24ஆம் திகதி காலை 10.30 மணியளவில்  மட்டக்களப்பு  காந்தி பூங்கா முன்றலில் அமைந்துள்ள இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஞாபகார்த்த நினைவுத் தூபியில்  நடைபெறவுள்ளது. 

இதன்போது படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதனைத் தெடர்ந்து, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடக்கு , கிழக்கு மற்றும்  தெற்கு ஊடக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடைபெறும், இந்த ஞாபகார்த்த நிகழ்விற்கு ஊடகவியலாளர்கள், சமூக நலன் விரும்பிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளையும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours