(மண்டூர் மேலதிக நிருபர்)


மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதானவீதி கல்லடி விபுலானந்தா இசை நடனக் கல்லூரிக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் மீது கொள்கலன் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டதையடுத்து பின்னால் வந்த உழவு இயந்திரத்தில் சிக்குண்டதில் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (22) மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரையம்பதியைச் சேர்ந்த 50 வயதுடைய சிவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த மகன் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.; விபத்தில் படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு மணிமாறன்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours