நூருல் ஹுதா உமர்
 
தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல். எம். அதாஉல்லாவின் வழிகாட்டலிலும், ஆலோசனையின் படியும் அபிவிருத்தி செய்த அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட புதுப்பள்ளி வட்டார ஆலீம் வீதி, ஜின்னா வீதியின் 4 வது ஒழுங்கை மற்றும் ஹிஜ்றா வீதி என்பவற்றினை சனிக்கிழமை (22) அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி திறந்து வைத்து, மக்கள் பாவனைக்காக கையளித்தார்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் (நளிமீ), அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ. ரீ.எம்.றாபி, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜேதுங்க, அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஜி.அஸ்மி, முஹம்மத் சிறாஜ், மாநகர சபையின் சட்டத்தரணி எ.எல்.எம். ஆசாத் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours