அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் 2022 ஆம் ஆண்டுக்கான (49வது) வருடாந்த பொதுக்கூட்டமும், நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக தெரிவும் கல்முனை அல்-பஹ்ரியா தேசிய பாடசாலை கூட்ட மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23) காலை 10.00 மணியளவில் கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும், சங்கத்தின் பொதுச் செயலாளருமான எம்.ஜ.எம் அப்துல் மனாப் இன் நெறிப்படுத்தலில் முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும் சங்கத்தின் தலைவருமான வை.கே.றஹ்மான் தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ்வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள், சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களின் தலைவர், செயலாளர் மற்றும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட நடுவர் சங்கத்தின் தலைவர், செயலாளர் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் கொவிட்-19 காரணமாக தடைப்பட்டிருந்த விளையாட்டு மற்றும் சுற்றுப் போட்டி தொடர்களை ஆரம்பிப்பது தொடர்பாகவும், சங்கத்தின் யாப்பில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் அதனை மிக விரைவில் சீர் செய்வது எனவும், மைதானங்களில் ஏதாவது குறைகள் இருந்தால் அதையும் மிக விரைவில் சீர் செய்து தருவதாகவும் மற்றும் இரண்டாம் நிலையில் உள்ள கழகங்களை முதலாம் நிலைக்கு கொண்டு சொல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தொடர்பாக பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாகவும், வாக்கெடுப்பின்றி ஏனைய பதவிகளுக்கானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாளர் மற்றும் உபதலைவர் பதவிகளுக்கான வாக்கெடுப்புக்கும் அன்றையதினம் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.ஜ.எம் அப்துல் மனாப் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours