காரைதீவு சகா
காரைதீவு கடற்கரையில் விசேடமாக அமைக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானத்தில் இச்சுற்றுப்போட்டி நடைபெற்றது. 14அணிகள் பங்கேற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் கேஎஸ்ஸி(KSC)கழகத்தின் இருஅணியினர் மோதினர்.
அணி 'எ'வீரர்களான வை.வருணுஜன் வி.டிலக்ஷன் சாம்பியன்களாகவும் அணி'பி' வீரர்களான பி.சுலக்ஷன் பி.அனோஜன் றன்னஸ்அப் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
சுற்றுப்போட்டிக்கான பரிசளிப்புவிழா கழகத்தலைவர் வெ.அருள்குமரன்(ஆசிரியர்) தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்து சிறப்பித்தார்.
கௌரவஅதிதிகளாக கழகப்போசகர்களான பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன், உத்தரவுபெற்றநிலஅளவையாளர் வே.இராஜேந்திரன், உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours