கொக்கட்டிச்சோலைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு மேற்கினைச் சேர்ந்த 63 வயதுடைய வைரமுத்து மாணிக்கவாசகம் என்பவர் தனக்குத்தானே தூக்கிட்ட நிலையில் சடலமாக 24 ஆம் திகதி திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக  கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் முனைக்காட்டுப் பிரதேசத்தின் ஆற்றை ஆண்டிய காட்டுப்பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  23 ஆம் திகதி  காலை வீட்டில் இருந்து புறப்பட்டவர் வீடுதிரும்பாத நிலையில் அப்பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்களி உதவியுடன் தேடியபோதே ஆற்றினை அண்டிய தோணாப் பகுதியில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை  கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours