( வி.ரி.சகாதேவராஜா)
சுவாமிகள் கண்டி ,ஹற்றன் ,கொட்டகல, பன்வில, உன்னஸ்கிரிய ஆகிய பிரதேசங்களுக்குச்சென்று ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்தினர்.
உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜ் ,மட்டு.இ.கி.மிசன் துணைமேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.
பிரதம அதிதியாக, இந்தியா கோயம்புத்தூர் ராமகிருஷ்ண மிஷன் ஶ்ரீமத் சுவாமி ஹரிவ்ரதானந்தஜீ மஹராஜ் கலந்துகொண்டு கதாப்பிரசங்கம் நிகழ்த்தினார்.
கண்டி இந்துமாமண்டபம் ,ஹற்றன் ஹைலண்டஸ் கல்லூரி, கொட்டகல ஆசிரியர் கல்வியியல்கல்லூரி ,கொட்கல விஸ்ணுஆலயம் ,கொட்டகல செல்வவிநாயகர் மண்டபம், பன்வில மகாவித்தியாலயம் ,உன்னஸ்கிரிய தமிழ்ப்பாடசாலை ஆகிய இடங்களில் மேற்படி சொற்பொழிவுகள் நடைபெற்றன.
மலையகப்பயணத்தை வெற்றிகரமாக பூர்த்திசெய்த சுவாமிகள் நேற்றும் ,நேற்றுமுன்தினமும் வவுனியா, மன்னார் ,நானாட்டான் போன்ற பிரதேசங்களுக்கு சென்று வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் இலங்கைவிஜயத்தின் 125ஆவது ஆண்டுநிறைவு விழிப்புணர்வுப்பிரசாரத்தை முன்னெடுத்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours