காரைதீவு  சகா

திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக ஆவணங்கள் இன்றி குடியிருக்கு மற்றும் பயிர் செய்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் மக்களுக்கான ஆவணங்கள் வழங்கு வதற்கான ஆரம்பக்கட்ட விசாரணை, திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றுவருகின்றது.

இவ் விசாரணையானது  கடந்த 6ஆம் திகிதிமுதல் 2008/04 சுற்று நிருபத்திற்கு அமைவானதாக இடம்பெற்று வருகின்றது.

மேலும் ,இந் நிகழ்வானது சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் இடம்பெற்று வருகின்றது.

மேலும் இவ் நிகழ்வில்  திருக்கோவில்  பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன், பிரதேச செயலக காணி உத்தியோத்தர்களான பூ.கோவிந்தசாமி, ந.நந்தகுமார்,திருமதி.லோஜினி  காணிப்பிரிவு உத்தியோத்தர்கள் மற்றும் கிராம சேவையாளர்கள் ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours