காரைதீவு  சகா

அண்மைக்கால பாரிய விலையேற்றத்தால் தமது வாழ்வாதார தொழிலை இழந்த ஒரு தொகுதி மக்களுக்கு அம்பாறை மாவட்ட சமுகசெயற்பாட்டாளரும், காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வாழ்வாதார உதவிகளைச் செய்துவருகிறார்.

மிகவும் பின்தங்கிய கஞ்சிக்குடியாறு,நாவற்காடு, தம்பட்டை போன்ற பிரதேசங்களில் நேற்று(9) இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.

இடியப்பக் கைத்தொழிலுக்குத் தேவையான தளபாடங்கள் உபகரணங்கள் யாவும் ஒரு தொகுதியில் அடங்குகின்றன. ஒரே தடவையில் 100இடியப்பம் செய்வதற்கான வசதி இத்தொகுதியில் உள்ளன.

 அம்பாறை மாவட்ட சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் இதனை வழங்கிவைத்தார். அவருடன் சமுகசெயற்பாட்டாளர்களான வி.ரி.சகாதேவராஜா கே.ஏரம்பு ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours