(காரைதீவு நிருபர் )
இராமகிருஸ்மிசன் ஸ்தாபகர் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் இலங்கைவிஜயத்தின் 125ஆவது ஆண்டுநிறைவு விழிப்புணர்வுப்பிரசாரம் மன்னாரில் நடைபெற்றது.
உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ் தலைமையில் நேற்றுமுன்தினம் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜ் இமட்டு.இ.கி.மிசன் துணைமேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.
பிரதம அதிதியாகஇ இந்தியா கோயம்புத்தூர் ராமகிருஷ்ண மிஷன் ஶ்ரீமத் சுவாமி ஹரிவ்ரதானந்தஜீ மஹராஜ் கலந்துகொண்டு கதாப்பிரசங்கம் நிகழ்த்தினார்.
கடந்த வாரம் கண்டி இந்துமாமண்டபம் ஹற்றன் ஹைலண்டஸ் கல்லூரி கொட்டகல ஆசிரியர் கல்வியியல்கல்லூரி கொட்கல விஸ்ணுஆலயம் கொட்டகல செல்வவிநாயகர் மண்டபம் பன்வில மகாவித்தியாலயம் உன்னஸ்கிரிய தமிழ்ப்பாடசாலை ஆகிய இடங்களில் மேற்படி சொற்பொழிவுகள் நடைபெற்றன.
Post A Comment:
0 comments so far,add yours