(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாநகரசபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விஸ்த்தரிக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட புகையிரத குறுக்கு வீதிக்கான கார்ப்பெட் இடப்பட்டு வேலைகள் இன்று 22/1/2022 ஆம் திகதி மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

1983 காலப்பகுதியில் இருந்து குறித்த புகையிரத குறுக்கு வீதியானது விஸ்த்தரிக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையினால்  குறித்த வீதியானது விஸ்த்தரிக்கப்பட்டு இன்று காபட் இடும் பணிகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த ரயில்வே குறுக்கு வீதியினது விஸ்த்தரிப்பு மற்றும் நிர்மாணப் பணிகளுக்கான அபிவிருத்திக்காக குறித்த காணியானது ரயில்வே திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலினை குறைக்கும் நோக்கோடு குறித்த வீதியானது விஸ்த்தரிக்கப்பட்டு இன்று வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வீதிக்கான மின் குழிழ்கள் மற்றும் மிகுதி அழகுபடுத்தும் வேலைகள் விரைவில் நிறைவு செய்யப்பட்டு மக்களின் பூரண பாவனைக்காக கையளிக்கப்படும் என மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours