சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக கடந்த வரவு செலவு திட்டத்தின் மூலம் சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரிக்கப்பட்ட  சமுர்த்தி கொடுப்பனவு வழங்க அங்கீகரிக்கப்பட்டமைக்கு அமைவா மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரிக்கப்பட்ட  சமுர்த்தி கொடுப்பனவினை வழங்கும் பிரதான நிகழ்வு கிரான்குளம் தெற்கு பல்தேவைக்கட்டட மண்டபத்தில்   பிரதேச செயலாளர் திருமதி. ந. சத்தியானந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்விற்கு
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரிவின் முகாமையாளர் ஜெயராஜ், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், தாழங்குடா வங்கி முகாமையாளர் மண்முனைப்பற்று பிரதேசசபை பிரதி தவிசாளர் மா.சுந்தரலிங்கம் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், பிரதேச அபிவிருத்தி குழு தலைவரின் பிரதிநிதி, கிரான்குளம், கிரான்குளம் வடக்கு, தெற்கு மற்றும் மத்தி பிரிவுகளை சேர்ந்த கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கிரான்குளம், கிரான்குளம் வடக்கு,தெற்கு மற்றும் மத்தி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த பிரதேச செயலக பிரிவிலுள்ள  ஏனைய 23 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டதுடன் கோவில்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெற்ற நிகழ்விலும் பிரதேசசெயலாளர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours