(வி.ரி.சகாதேவராஜா)


நாட்டில் 51வீதம் பெண் வாக்காளர்கள் இருந்தும் பெண்வேட்பாளர்களைத் தெரிவுசெய்யாதது ஏன்? .உள்ளுராட்சிமன்றங்களில் 90வீதமான பெண்பிரிதிநிதிகள் பட்டியில்முறையிலேயே தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இது ஏன்? உரிமை உரிமை என்று மகளிர்தினத்தில் மட்டும் குரலெழுப்புவதைவிடுத்து 25வீத ஒதுக்கீட்டை தக்கவைத்து இருக்கின்ற உரிமைகளுடன் மேலும் உரிமைக்காய் தொடர்ச்சியாக போராடவேண்டும்.

இவ்வாறு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கல்முனையில் இடம்பெற்ற மகளிர்தினவிழாவில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
மனித அபிவிருத்தித் தாபனத்தின் ஏற்பாட்டில்  அம்பாறை மாவட்ட சகவாழ்வுக்குழுக்கள் இணைந்து நடாத்திய மாபெரும் சர்வதேச மகளிர் தினவிழா நேற்றுமுன்தினம்(8) கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் மகளிர் அணித்தலைவி றிலீபா பேகம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
இன்று பெண்களுக்கு உரிய இடம் வழங்கப்பட்டிருக்கிறது.ஆனால் அதனை முழுமையாக பயன்படுத்த அவர்கள் முன்வரவேண்டும்.எந்ததொழிலும் பெண்களே அதிகம்.பெண்கள் தானாக முன்வந்து சட்டம் தீட்டும் இடத்திலும் திட்டம் போடும்  இடத்திலும் பிரதிநிதித்துவம் வகிக்காதவரை ஆணாதிக்கம் என்ற சொல்லைத் தவிர்க்கமுடியாது. என்றார்.

மனிதஅபிவிருத்தி தாபனத்தின் பணிப்பாளர் கலாநிதி பி.பி.சிவப்பிரகாசம் உரையாற்றுகையில்:
உள்ளுராட்சிமன்றங்களுக்கு செல்லும் பெண்பிரதிநிதிகள் பெண்பிரதிநிதியாகவே செல்லுங்கள்.அதைவிடுத்து முஸ்லிம் பிரதிநிதி தமிழ்பிரதிநிதி சிங்களபிரதிநிதி என்ற எண்ணத்தை கைவிடுங்கள். எந்தஇனப்பெண்ணுக்கு பிரச்சினை எழுந்தாலும் இனமதபேதமின்ற அனைவரும் ஒருமித்து பெண் என்ற அடிப்படையில் குரல்எழுப்பவேண்டும்.

பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அதற்கு காரணம் ஆண் என்ற கருத்துள்ளது.சரி என்போம். எனின் பெண்ணுக்கு உரிமைவேண்டும் சுதந்திரம் வேண்டும் என்று கூறி பெண்ணுக்கு மட்டும் சட்டவரையறை கட்டுப்பாடு விதிக்கப்படுவதைக்காண்கிறோம். மாறான அது ஆண்களுக்கே விதிக்கப்படவேண்டும்.என்றார்.

பிரதமஅதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் புகழ்பெறு மற்றும் அதிதியாக மனிதஅபிவிருத்தித்தாபனத்தின் பணிப்பாளர் கலாநிதி பி.பி.சிவப்பிரகாசம் கலந்துசிறப்பித்தார்கள். கௌரவ  அதிதிகளாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் எ.சி.எ.அசீஸ் ,காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன், மனிதஅபிவிருத்திதாபனத்தின் ஆலோசகரும் உதவிக்கல்விப்பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மகளிர் சிறப்பு அதிதிகளாக மனிதஅபிவிருத்தித்தாபன மகளிர்விவகார இணைப்பாளர் திருமதி லோகேஸ்வரி சிவப்பிரகாசம், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்டவிரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கையில் மனிதஉரிமைகள் மற்றும் சமுகசேவைகள் தொடர்பில் ஆற்றிவரும் அளப்பரிய சேவைக்காகவும் மனிதஉரிமைத் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றமைக்காகவும் நிகழ்வில் மனிதஅபிவிருத்தித்தாபனத்தின் பணிப்பாளர் கலாநிதி பி.பி.சிவப்பிரகாசம் 'உரிமைச்சுடர் 'விசேடவிருது வழங்கிப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.அவர் தொடர்பான சேவைகளை ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா விளக்கி உரையாற்றியதோடு கௌரவிப்பு நிகழ்வை நெறிப்படுத்தினார்.

சகவாழ்வுக்குழு உறுப்பினர்களின் சிறப்பான வித்தியாசமான கலைநிகழ்ச்சிகள் மேடையேறின. குறிப்பாக நிந்தவூர் சம்மாந்துறை உள்ளுராட்சிமன்ற பெண் பிரிதிநிதிகள் பங்கேற்ற கருத்துக்களம் நிகழ்ச்சி வில்லுப்பாட்டு ஜே.தக்சாளினி குழுவினரின் பரதநாட்டியம்  என்பன சபையோரை வெகுவாக கவர்ந்தன..
தாபனத்தின் வடக்குகிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த் உதவிஇணைப்பாளர் எம்.ஜ.றியால் ஆனியோரும் கலந்து சிறப்பித்தனர்.இலங்கைவானொலி ஊடகவியலாளர் நயீம் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தார்.











Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours