(காரைதீவு சகா)

காரைதீவு பெற்றறெடுத்த மற்றுமொரு இ.கி.மிசன் துறவி சேவையின் சிகரம் சுவாமி நடராஜானாந்தா ஜீயின் 55ஆவது சிரார்த்ததினம் நேற்று(18)வெள்ளிக்கிழமை அவர்பிறநத காரைதீவில்  நடைபெற்றது.

அவரது திருவுருவுச்சிலை அமைந்துள்ள பிரதானவீதியில் இந்துசமயவிருத்திச்சங்க உபதலைவர் இரா.குணசிங்கம் தலைமையில்நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் பிரதம அதிதியாகக்கலந்து சிறப்பித்தார்.

சிறப்புரையை சுவாமி நடராஜானாந்த நுற்றாண்டுவிழாச்சபையின் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.

முன்னதாக சுவாமியின் உறவினரான த.சச்சிதானந்தம் நந்திக்கொடியேற்றியதும்  துறவறகீதம் இசைக்கப்பட்டது.
சபைச்செயலாளர் கு.ஜெயராஜி நன்றியுரையாற்றினார்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours