!



(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

சமூக சேவை உத்தியோகத்தர்கள், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முதியோர் அபிவிருத்தி  உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த மீளாய்வு கூட்டமும் மனித நேயம் மற்றும் உள்ளடக்கம் என்ற அமைப்பினால்  நடாத்தப்பட்ட விழிப்புணர்வு  நிகழ்வும்  இன்று (02) மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா  மண்டபத்தில்  இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்  உதவி மாவட்ட செயலாளர் ஆ .நவேஸ்வரன்  அவர்களின் தலைமையில்
மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி.சந்திரகலா கோணேஸ்வரனின் ஏற்பாட்டில்  இடம் பெற்றது.
 
இதன்போது கடந்த 2021 ஆண்டிற்க்கான ஆண்டறிக்கை மற்றும் 2022 வருடத்துக்கான  செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களில்  கடமையாற்றும் சமூகசேவை உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு கலந்துகொண்டிருந்தனர்.

அதுமட்டுமல்லாது சமூதாய  மட்ட புணருத்தாபன நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம்  அங்கவீனமுற்றவர்களுக்கான   தேசிய செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும்  செயற்திட்டங்கள் தொடர்பாகவும், அங்கவீனமுற்றவர்களுக்கான கருத்திட்டம், நேரடி உதவிகள், சுய தொழிலுக்கான  கொடுப்பனவுகளாக வழங்கப்படுகின்ற ரூபா 25,000 முதல் ரூபா 30,000 வரையான மாணிய உதவித்திட்டங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்டங்கள்  தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வின் போது மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலையின்  சத்திரசிச்சை வைத்திய நிபுணர் சுதர்ஷன் சுந்தரலிங்கம் அவர்களினால் பிறப்பிலேயே வளைந்தபாத  குறைபாடு உள்ள பிள்ளைகளை எவ்வாறு குணப்படுத்துவது என்பது
தொடர்பான விழிப்புணர்வு உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டதுடன், கமிட் நிறுவனத்தின் கள செயற்பாட்டு  முகாமையாளர் எம்.ஜெயக்குமார் அவர்களினால் அங்கவீனமுற்றவர்களுக்காக வலுப்படுத்தும்  வழிமுறைகள் தொடர்பாகவும்  இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளில் மாவட்ட முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் விஸ்வ கோகிலன்,
மாவட்ட செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ச.அமிர்தநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours