(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
இந்துக்களினால் மிகச்சிறப்பாக சிவனை நோக்கி அனுஸ்டிக்கும் மகா சிவராத்திரி விரத்தின் பூசை நிகழ்வுகள் கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்று (01) திகதி செவ்வாய்க்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் மாலை 06 மணிக்கு முதலாவது ஜாமபூசையும், இரவு 10 மணிக்கு இரண்டாவது ஜாமபூசையும் (லிங்கோற்பவர் பூசையும்), அதிகாலை 03 மணிக்கு மூன்றாவது ஜாமபூசையும், இன்று (02) திகதி காலை 05 மணிக்கு நான்காவது ஜாமபூசையும் இடம்பெற்றிருந்தது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சுதானந்த குருக்கள் தலைமையில் சிவஸ்ரீ சோதிலிங்க குருக்கள் மற்றும் மு.கு.சபாரெட்ணம் குருக்கள் ஆகியோரினால் நான்கு ஜாமபூசை வழிபாடுகளும் விசேட யாக பூசையும் மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்ததுடன், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் வருகைதந்து பூசை வழிபாடுகளில் பக்திபூர்வமாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours