ஆன்மீக ஜெகத்குரு மகாயோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள் கடந்த(11)வெள்ளிக்கிழமை வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தார்.
அவருடன் அவரது சீடர்கள் நூற்றுக்கணக்கானோர் மண்டுர் கல்முனை போன்ற பிரதேசங்களிலிருந்து வருகை தந்திருந்தனர்.அவரது வருகையை அறிந்து மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
ஆலய அர்ச்சகர் கே.கணேசன் விசேட வெள்ளி பூஜையை நடாத்தினார்.வெள்ளிமதியபூஜையைத் தொடர்ந்து ஆலயஆலோசகர் வி.ரி.சகாதேவராஜாவின் நெறிப்படுத்தலில் ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் சமயநிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது.
மகாயோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள் அங்கு மக்களுக்கு அருளுரையாற்றினார்.
Post A Comment:
0 comments so far,add yours