நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை மற்றும் கல்முனை நீர்ப்பாசன பிரிவுக்கான 2022 ஆம் ஆண்டின் சிறு போகத்திற்கான கால அட்டவணையும் நிறைவேற்று தீர்மானங்கள் நிறைவேற்றும் கூட்டமும் நேற்று (22) மாலை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்லஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல்.எம். ஹனிபா, விவசாய திணைக்கள உயரதிகாரிகள், மற்றும் உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், பாதுகாப்பு படையினர், விவசாய அமைப்புக்களின் பிரதானிகள், அம்பாறை மாவட்ட விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தில் ஆரம்ப வேலைகளுக்கான காலம், விதைப்புக்காலம், விதைக்கும் நெல்லினம், பயிர்க் காப்புறுதி, நீர் விநியோகம், மாடுகளின் அப்புறப்படுத்துகை, கிளை வாய்க்கால் பேணுகை, தந்தங்கள், கூலிகள், யானை பிரச்சினைகள், டீசல் மற்றும் யூரியா பசளை கிடைப்பதில் உள்ள பிரச்சினைகள் அதனால் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் விவசாயிகள் எடுத்துரைத்த விடயங்கள் தொடர்பில் சபையில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours