-----

(அஸ்ஹர் இப்ராஹிம், எம்.என்.எம்.அப்ராஸ்,நூருள் ஹுதா உமர்)

விஞ்ஞான பாடத்தினை கற்க்கும் மாணவர்களுக்கு இலகு முறையில் கற்றுக்கொள்ளும் வகையில் சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தின் விஞ்ஞான பாட ஆசிரியர் எம்.எம்.எம்.உவைஸ் எழுதிய மாணவர்களுக்கான விஞ்ஞான  வினா விடை தொகுப்பு அடங்கிய விஞ்ஞான தேனருவி தரம்-06, விஞ்ஞான தேன் கிண்ணம் தரம்-07, விஞ்ஞான தேனருவி தரம்-09 ஆகிய 03 விஞ்ஞான நூல்கள் வெளியீடு,லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தின் ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்ப்பாட்டில் பாடசாலை பிரதி அதிபர் ஏ.எம். நிசார் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று (28 ) திங்கள் இடம்பெற்றது .

இதன் போது பிரதம அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி என்.எம்.ஏ.மலிக் அவர்களும் ,கெளரவ அதிதியாக பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் , சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்.வித்தியாலய அதிபர் 
எம்.ஐ.இல்லியாஸ் கல்முனை அஸ்ஸுஹரா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா,அல் -ஜலால் வித்தியாலய பிரதி அதிபர் டி.கே.எம். சிராஜ் ,லீடர் அஷ்ரப் வித்தியாலய பாடசாலை பிரதி அதிபர் எஸ்.எம். சுஜான் , ஆசிரியர் ஏ. ஷியாம் அவர்களும் ,விசேட அதிதியாக சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ்.சஹ்துல் அமீன்,உட்பட பாடசாலை ஆசிரியர்கள்  மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

நூலாசிரியர் எம்.எம்.எம்.உவைஸ் 20 வருட காலம்      
கற்பித்தல் அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours