பிரதேச செயலக பிரிவில் சமுர்த்திஅபிமானி விற்பனை கண்காட்சியும், விற்பனை சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்றைய தினம் (07) திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி தலைமையில் ஆரையம்பதி பிரதான வீதியில் அமைந்துள்ள சிறு கைத்தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை இடம்பெற்றது.
இதன் போது சமுர்த்தி பயனுகரிகளின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி, சமூர்த்தி முகாமையாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஒருபொதுமக்களென பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours