( காரைதீவு  நிருபர் சகா)

வரலாற்றுப்பிரசித்திபெற்ற அருள்மிகு மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் ஆவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட மஹா கும்பாபிஷேக குடமுழுக்குப்பெருவிழா 
(6) புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேக பிரதமகுருவாக ஆலயபிரதமகுருவும் கிழக்கிலங்கையின் பிரபல சிவாச்சாரியாரியாருமான சிவாகம வித்யாபூஷணம் சிவாச்சார்ய திலகம் பிரதிஸ்டாதிலகம் ஜோதிடவித்யாதத்துவநிதி விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செயற்பட்டார்கள்.

கடந்த 2ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 5மணிக்கு கர்மாரம்பத்துடன் கிரியைகள் யாவும் ஆரம்பமாகின. எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் திங்கள்(4)காலை 8மணி முதல் நேற்று செவ்வாய்க்கிழமை(5) வரை பெருந்திரளான பக்தர்களுடன் நடைபெற்றது.

நேற்று மஹா கும்பாபிஷேகம் 6ஆம் திகதி புதன்கிழமை காலை 9.12மணிமுதல் 10.27மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திலிருந்து பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஆலயகுரு சிவஸ்ரீ ச.ஹோவர்த்தன சர்மா ஒழுங்கமைப்பில் சர்வசாதகராக ஆரியபாஷாவிற்பன்னர் சிவஸ்ரீ சண்முக மயூரவதனக்குருக்களும் பிரதிஸ்டா குருவாக கிரியாஜோதி சிவஸ்ரீ வே.யோகராசாக்குருக்களும் செயற்பட்டனர்.

ஆலய வளாகத்தில் நிருமாணிக்கப்பட்ட புதிய அன்னதான மண்டபத்தில் பாண்டிருப்பைச் சேர்ந்த கோ.ஜனபாலச்சந்திரன்(அவுஸ்திரேலியா) அன்னதானத்தை வழங்கினார். சுமார் 3000 பேரளவில் பசியாறினர்.

ஆலய தலைவர் கி.ஜெயசிறிலின் தலைமையில் ஆலோசகர் வி.ரி. சகா தேவராஜாவின் நெறிப்படுத்தலில் சிவாச்சாரியார்கள் உள்ளிட்ட சேவையாளர் களுக்கு சான்றிதழ் தட்சணை மற்றும் வஸ்திரங்கள் வழங்கப்பட்டன.

கும்பாபிஷேக பெருவிழா நிறைவு பெற்றதும் மழை பொழிந்தமை குறிப்பிடத்தக்கது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 24தினங்களுக்கான மண்டலாபிசேக பூஜைகள் ஆரம்பமானது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours