வட மாகாணத்துக்கும், கிழக்கு மாகாணத்துக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க கராத்தே போட்டி கடந்த சனிக்கிழமை திருகோணமலையில் மெக்கெய்சர் உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
2006 ஆம் ஆண்டுக்கு பின்பு முதன் முறையாக நடைபெற்ற இந்த போட்டியில் வடக்கிலிருந்து ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியது ஓர் சிறப்பம்சமாகும்.
இந்த போட்டியை ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாணம் அதன் தலைவர் ஏ.ஆர்.இக்பால் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த போட்டியில் 90 வீதமான போட்டி நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில் நாட்டில் திடீரென அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு நிலைமையால் ஏனைய போட்டிகளும் பரிசளிப்பு நிகழ்வுகளும் பிற்போடப்பட்டுள்ளன.

Post A Comment:
0 comments so far,add yours